ADDED : செப் 15, 2025 09:42 PM
உடுமலை; உடுமலை வட்டத்தின் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற முப்பெரும் விழா நடந்தது.
உடுமலை வட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு உட்பட முப்பெரும் விழா நடந்தது.
மன்றத்தின் உடுமலை வட்டாரத் தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.செயலாளர் சத்யராஜ் வரவேற்றார். மன்ற மாநில பொதுச்செயலாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.
பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, உடுமலை நகராட்சித்தலைவர் மத்தீன் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்.
மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் தங்கவேல், ஆனந்தி, தர்மராஜ், சிறப்பாசிரியர் விருதுபெற்ற கண்ணபிரான் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில், மன்றத்தின் மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.