/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆசிய தடகளம்; சாதித்த மூத்தோர்
/
ஆசிய தடகளம்; சாதித்த மூத்தோர்
ADDED : நவ 17, 2025 01:20 AM

திருப்பூர்: இந்திய தடகள கூட்டமைப்பின் சார்பில் 23 வது ஆசிய அளவிலான மூத்தோர் தடகளப்போட்டிகள், கடந்த 5 முதல் 9ம் தேதி வரை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்தது. இதில் 27 நாடுகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 6 வீரர், 6 வீராங்கனைகள் என 12 பேர் இந்திய அணிக்காக பங்கேற்றனர்.
இதில் பெண்கள் 75 வயதினர் பிரிவில் கண்ணம்மாள் ஈட்டி எறிதலில் முதலிடம், வட்டு எறிதலில் இரண்டாமிடம், குண்டு எறிதலில் மூன்றாமிடம் பெற்றார். பெண்கள் 40 வயது பிரிவில், ரெஜனி பிரதீபன் கோலுான்றித் தாண்டுதலில் இரண்டாமிடம், சந்தனமாரி 5 கி.மீ. வேகநடையில் இரண்டாமிடம் பெற்றார்.
ஆசிய அளவிலான மூத்தோர் தடடகளத்தில் வென்ற வீராங்கனைகளுக்கு கொங்குநாடு விளையாட்டு அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன், செயலாளர் மோகன்குமார், பொருளாளர் தங்கராஜ், ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் பவானி, செயலாளர் அழகேசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

