நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாநகராட்சி, 32வது வார்டில், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. வளர்ச்சி நிதியின் மூலம் கோல்டன் நகரில் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலும், ஏ.எஸ்.பண்டிட் நகரில் 13.50 லட்சம் ரூபாய் மதிப்பிலும் ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளை எம்.எல்.ஏ. விஜயகுமார் திறந்துவைத்தார்.
மாநகராட்சி இரண்டாவது மண்டல தலைவர் கோவிந்தராஜ், உதவி பொறியாளர் சண்முகம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

