/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டாக்டருடன் தகராறில் ஈடுபட்ட போதை நபர்கள்
/
டாக்டருடன் தகராறில் ஈடுபட்ட போதை நபர்கள்
ADDED : நவ 17, 2025 01:19 AM
திருப்பூர்: இரு நாட்கள் முன்பு, திருப்பூர் மாவட்டம், காங்கயம், மேட்டுபாறையில் 'டாஸ்மாக்' மதுக்கடை அருகே டூவீலரில் சென்ற கேரள வாலிபர் ஒருவர் கீழே விழுந்தார். காங்கயத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றார். பணியில் இருந்த டாக்டர் ஒருவர், வாலிபருக்கு சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தார்.
அன்றிரவு, 11:00 மணியளவில் அந்த வாலிபர், நண்பர்கள் சிலருடன் மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார். உடன் வந்த சிலர் போதையில் இருந்தனர். டாக்டரிடம், 'முறையான உபகரணங்கள் கொண்டு சிகிச்சை இல்லை. தரமான சிகிச்சை கிடையாது' என கூறி தகராறில் ஈடுபட்டனர். அங்கு சென்ற காங்கயம் போலீசார், வாலிபர்களை எச்சரிக்கை செய்ததோடு, மேல் சிகிச்சைக்காக அந்த வாலிபரை திருப்பூர் அனுப்பி வைத்தனர். டாக்டர் தரப்பில் புகார் அளிக்க முன் வரவில்லை. இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்ந்து, மூன்று ஆண்டுகளானது. இதுவரை முறையான வசதிகள் செய்து தரப்படாமல் உள்ளது. பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. வளாகத்தில், அவுட் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். அல்லது சுழற்சி முறையில் எப்போதும் போலீசார் பணியில் இருக்க வேண்டும்.

