/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண்ணெண்ணெய் ஊற்றி உறவினரை கொல்ல முயற்சி
/
மண்ணெண்ணெய் ஊற்றி உறவினரை கொல்ல முயற்சி
ADDED : அக் 02, 2025 11:25 PM
திருப்பூர்:திருப்பூர், மங்கலம் ரோடு ஜம்மனை முதல் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி, 55; தண்ணீர் கேன் விற்பனையாளர். உறவினரான அதே பகுதியை சேர்ந்த நாகராஜ், 33 என்பவருடன் குடும்ப பிரச்னை ஏற்பட்டது.
சில நாட்கள் முன், பழனிசாமியுடன் தகராறில் ஈடுபட்ட நாகராஜ், மண்ணெண்ணெயை அவர் மீது ஊற்ற முயற்சி செய்தார். தப்பியோடிய அவரை கல்லால் தாக்கினார். காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். புகாரின் பேரில், சென்ட்ரல் போலீசார் விசாரித்தனர். கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நாகராஜை நேற்று கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், ''கைது செய்யப்பட்ட நாகராஜின் சகோதரர் சில மாதம் முன் தற்கொலை செய்தார். இதற்கு காரணம், பழனிசாமியும், அவரது மகனும் தான் காரணம் என்று குடும்ப பிரச்னை எழுந்தது. இதன் தொடர்ச்சியாக பழனிசாமியிடம் தகராறு செய்த நாகராஜ் மண்ணெண்ணெயை ஊற்றி கொல்ல முயன்றுள்ளார்'' என்றார்.