/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விற்பனை கூடத்தில் விளை பொருட்கள் ஏலம்
/
விற்பனை கூடத்தில் விளை பொருட்கள் ஏலம்
ADDED : செப் 17, 2025 08:52 PM

உடுமலை; மடத்துக்குளத்தில் நடந்த தேங்காய் ஏலத்தில், கிலோ ரூ. 71.50க்கும், கொப்பரை ரூ. 230 க்கும் விற்பனையானது.
மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கொப்பரை மற்றும் தேங்காய் ஏலம் நடந்து வருகிறது.
இந்த ஏலத்தில், 1,620 கிலோ எடையுள்ள, 4,600 தேங்காய், 20 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்த ஏலத்தில், 8 வியாபாரிகள் பங்கேற்றனர்.
இதில், அதிபட்ச விலையாக ஒரு கிலோ தேங்காய், ரூ. 71.50 க்கும் குறைந்த பட்ச விலையாக, ரூ. 67.15 என சராசரியாக, ரூ.70 க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, ஒரு லட்சத்து, 12 ஆயிரத்து, 857 ரூபாயாகும்.
அதே போல், கொப்பரை ஏலத்திற்கு, 19 விவசாயிகள், 19 மூட்டை அளவுள்ள, 419.80 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்த ஏலத்தில், 8 வியாபாரிகள் பங்கேற்று, அதிகபட்சமாக, ஒரு கிலோ ரூ.230 க்கும் , குறைந்த பட்சமாக, ரூ. 183 என, சராசரியாக, ரூ.220க்கு ஏலம் எடுத்தனர். இதன் மதிப்பு, 91 ஆயிரத்து, 340 ரூபாயாகும்.
ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்த பொருளுக்குரிய தொகை விவசாயிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
தேசிய அளவில் வியாபாரிகள் பங்கேற்பதால் கூடுதல் விலை கிடைக்கிறது. எனவே, விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.