/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுய உதவிக்குழு பயிற்றுனர்களுக்கு தணிக்கை சிறப்பு பயிற்சி
/
சுய உதவிக்குழு பயிற்றுனர்களுக்கு தணிக்கை சிறப்பு பயிற்சி
சுய உதவிக்குழு பயிற்றுனர்களுக்கு தணிக்கை சிறப்பு பயிற்சி
சுய உதவிக்குழு பயிற்றுனர்களுக்கு தணிக்கை சிறப்பு பயிற்சி
ADDED : ஏப் 23, 2025 12:28 AM
உடுமலை; மகளிர் திட்டத்தின் சார்பில், சுய உதவிக்குழு பயிற்றுனர்களுக்கு, தணிக்கை சிறப்பு பயிற்சி மூன்று நாட்கள் நடக்கிறது.
உடுமலை சுற்றுப்பகுதியில், 896 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் செயல்படுகின்றன. இந்த சுயஉதவிக்குழுக்களுக்கு, பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இக்குழுக்களுக்கு வங்கிகள் வாயிலாக கடனுதவியும் வழங்கப்படுகிறது.
இந்த குழு பயிற்றுனர்களுக்கு ஆண்டு தோறும் பயிற்சி அளிககப்படுகிறது. மகளிர் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வட்டாரத்திலும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, மகளிர் சுய உதவி குழு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் செயல்படுகிறது.
ஒவ்வொரு நிதியாண்டிலும், மாவட்ட அளவிலான மகளிர் திட்ட தணிக்கை பொறுப்பாளர்கள் குழுவின் கணக்குகள் தணிக்கை செய்யப்படுகிறது. புதிய நிதியாண்டு துவங்கியுள்ளதால், தணிக்கை செய்வதற்கான முதற்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மகளிர் சுய உதவிக் குழு பயிற்றுனர்களுக்கு, மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில், தணிக்கை பயிற்சி வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் குறிப்பிட்ட பகுதிகளை ஒன்றிணைத்து, அங்குள்ள பயிற்றுனர்களுக்கு ஒருங்கிணைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள பயிற்றுனர்களுக்கு, மூன்று நாட்கள் இப்பயிற்சி நடக்கிறது. முதல் நாள் பயிற்சி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள இரண்டு நாட்கள் பயிற்சி, ஏப்., இறுதிக்குள் வழங்கப்படுகிறது.