/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆட்டோ டிரைவர்கள் பொதுக்குழு கூட்டம்
/
ஆட்டோ டிரைவர்கள் பொதுக்குழு கூட்டம்
ADDED : அக் 18, 2025 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: பல்லடம் பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்க செயற்குழு, பொதுக்குழு கூட்டம், பி.எம்.ஆர்., திருமண மண்டபத்தில் நடந்தது. செயலாளர் நாகூர் மீரான் தலைமை வகித்தார்.
ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் கண்டிப்பாக சீருடை அணிந்துதான் ஆட்டோ ஓட்ட வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
புதிய கவுரவ தலைவராக ராயல் மணி, தலைவராக ஜாகீர் உசேன், செயலாளராக ரவிச்சந்திரன், பொருளாளராக சாகுல் ஹமீது, துணைத் தலைவராக நாகூர் மீரான், துணைச் செயலாளராக விஜயன் ஆகியோர் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.