/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வாட்ஸாப்'-ல் வலை வீச்சு ஏமாந்தால் பணம் காலி
/
'வாட்ஸாப்'-ல் வலை வீச்சு ஏமாந்தால் பணம் காலி
ADDED : அக் 18, 2025 11:33 PM

திருப்பூர்: வாட்ஸாப்பில் லிங்க் அனுப்பி வாழ்த்து தெரிவிப்பது போல், ஏமாற்றுவது, பண்டிகை காலத்தில் அதிகரித்துள்ளது.
தீபாவளி என்றாலே இனிப்பு, பரிசு, ஷாப்பிங், பட்டாசு என்று கொண்டாட்டமாக இருப்பது வழக்கம். அதே நேரம், கவனமாகவும் இருக்க வேண்டும்.
சமீப காலங்களில் சமூக வலைதளத்தில், குறிப்பாக வாட்ஸாப்பில் லிங்க் அனுப்பி தீபாவளி பரிசு வந்திருக்கிறது. இதனை 5 நபருக்கு, குழுவிற்கு பகிர்ந்து செய்து பரிசு வெல்லுங்கள் என்று மெசேஜ்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இவை, நமக்கு நன்கு அறிந்தவர் வாயிலாகவே வந்து சேர்கிறது. நிறுவனங்கள் பரிசு வழங்குவது போலவே டிசைன் செய்து அனுப்பப்படுகிறது. பெரியவர்கள் இந்த லிங்க்கை பார்க்காமல் அதில் உள்ள ஆசை வார்த்தைகள் மட்டும் பார்த்து ஏமாறுகின்றனர்.
இதில் போலி கமென்ட்களும் இருக்கும், 'தீபாவளிப் பரிசு எனக்கு கிடைத்தது', 'நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை, இன்று காலை எனது பரிசு வீட்டுக்கு வந்தது,' என்றெல்லாம் 'கமென்ட்செக் ஷனில்' அள்ளி விட்டுள்ளனர்.
இதை பார்த்தவுடன் சிலர் நம்பி ஏமாறுகின்றனர், பலருக்கு அனுப்பியும் வைக்கின்றனர். இதனால், நமது சொந்த தகவல் திருட்டு, ஹேக்கிங் நடக்க வாய்ப்பிருக்கிறது. எனவே தேவையில்லாமல் எந்த லிங்க்கையும் தொடக் கூடாது, கவனமாக இருக்க வேண்டும்.