
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை ஸ்ரீ விஸ்வகர்ம சமூக நலச்சங்கம் சார்பில், நேற்று ராமய்யர் திருமண மண்டபத்தில், ஸ்ரீ விஸ்வகர்ம அவதார ஜெயந்தி விழா நடந்தது.
காலை, 9:00 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கிய விழாவில், வேதபாராயணம், விக்னேஸ்வர பூஜை, விஸ்வ காயத்ரி ஆவாஹனம், ஸ்ரீ மகா விஸ்வகர்ம விஸ்வ சித்தியாகம் நடந்தது.
உடுமலை தென்னை மரத்து வீதி ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் சமேத விஸ்வகர்ம காமாட்சி அம்மன் கோவிலில், ஜெயந்தி பூஜை விழா நடந்தது.
காலை, 9:00 மணிக்கு கோவிலில், திருவிளக்கு பூஜை, 108 மூலிகை ேஹாமம், மகா தீபாராதனை நடந்தது. காலை, 10:30 மணிக்கு மேல், சுவாமிகளுக்கு அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது.