/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி குறுமைய தடகளம்; மாணவ, மாணவியர் உற்சாகம்
/
அவிநாசி குறுமைய தடகளம்; மாணவ, மாணவியர் உற்சாகம்
ADDED : ஆக 13, 2025 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; அவிநாசி குறுமைய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடந்தது.
இதில், 100, 200 மீ., ஓட்டப் போட்டி, நீளம் தாண்டுதல், உயரம்தாண்டுதல், தட்டெறிதல் உள்ளிட்ட பல்வேறுபோட்டிகள் நடத்தப்பட்டன.
மாணவ, மாணவியர் தங்களின் முழு திறமையையும் காண்பித்தனர். அவிநாசி வட்டார பள்ளிகளைச் சேர்ந்த, ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.