ADDED : ஆக 13, 2025 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; தபால் துறை சேவைகளை மேம்படுத்த புதிய (ஏ.பி.டி., 2.0 சாப்ட்வேர்) மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த, ஒரு வாரமாக நெட்வொர்க் பிரச்னையால் பணிகளை விரைந்து முடிக்க முடியவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, திருப்பூர் மாநகர் உள்ளிட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், எழுத்தர்கள் சங்கம் சார்பில், ஊழியர்கள் நேற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். போராட்டம் இன்றும் நடக்கிறது.