ADDED : செப் 04, 2025 10:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை பகுதியில், வடகிழக்கு பருவமழை சீசனில் பல ஆயிரம் ஏக்கரில், விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படும். இந்த சீச னில், மானாவாரி சாகுபடி விதைப்பு, நிலைப்பயிர்களுக்கு உரமிடுவது வழக்கம்.
இதனால், வழக்கத்தை விட, யூரியா உட்பட உரங்களின் தேவை பல மடங்கு உயரும். எனவே, குறித்த நேரத்தில், தேவையான உரங்கள் கிடைப்பதில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'சீசனில், உரம் கிடைக்காததால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. சீசன் சமயங்களில் சில இடங்களில், யூரியாவுடன், கூடுதலாக வேறு உரங்களையும் வாங்க கட்டாயப்படுத்துகின்றனர். இது குறித்து, வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.