/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடை மருத்துவ முகாம் கிராமத்தில் விழிப்புணர்வு
/
கால்நடை மருத்துவ முகாம் கிராமத்தில் விழிப்புணர்வு
ADDED : மார் 15, 2024 11:46 PM
திருப்பூர்;திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம், அலகு - 2 சார்பில், கருமாபாளையம் கிராமத்தில் ஏழு நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
முகாமில், நேற்று கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
கருமாபாளையம் பால் உற்பத்தி கூட்டுறவு சங்க செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். கால்நடை மருத்துவர்கள் கோபால், லோகேஷ் பங்கேற்று, கால்நடை வளர்ப்பு குறித்து அப்பகுதியினருக்கு விளக்கினர்.
தேசிய தேனீக்கள் வாரிய உறுப்பினர் மஞ்சுளா மற்றும் ஜவஹர் ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். தேனீ வளர்ப்பு, எளிதில் சந்தைப்படுத்துதல் குறித்து பேசினர். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் துாய்மைப்பணி நடந்தது.
முகாம் ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் பூங்கொடி, துணைத்தலைவர் சண்முகசுந்தரம் செய்து இருந்தனர்.

