/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'விபத்தில்லா திருப்பூர் 2025' புத்தாண்டு இரவில் விழிப்புணர்வு
/
'விபத்தில்லா திருப்பூர் 2025' புத்தாண்டு இரவில் விழிப்புணர்வு
'விபத்தில்லா திருப்பூர் 2025' புத்தாண்டு இரவில் விழிப்புணர்வு
'விபத்தில்லா திருப்பூர் 2025' புத்தாண்டு இரவில் விழிப்புணர்வு
ADDED : ஜன 02, 2025 06:17 AM

திருப்பூர்; திருப்பூர் மாநகர போலீசார் சார்பில், புத்தாண்டு தினத்தன்று, நள்ளிரவில் வாகன ஓட்டிகளுக்கு 'கேக்' வழங்கி, 'விபத்தில்லா திருப்பூர்' என்ற நிலையை எட்ட விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
2025ம் ஆண்டு பிறந்த புத்தாண்டு இரவில், நகர வீதிகளில் வாகனங்களில் வலம் வருவது, ஓட்டல்களில் நடக்கும் இரவு விருந்து, புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்கவும் மக்கள் செல்வது வழக்கம்; இதனால், இரவிலும் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும்.
எனவே, நேற்று முன்தினம் திருப்பூர் மாநகரில், இரவு, 10:00 மணிக்கு மேல் மது விருந்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நகரின் பல்வேறு இடங்களில் சிட்டி போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அதே நேரம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகர காவல்துறை மற்றும் திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு சார்பில், 'விபத்தில்லா திருப்பூர் 2025' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை, திருப்பூர் மத்திய, புதிய பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி அலுவலக சிக்னல், வீரபாண்டி பிரிவு என ஏழு இடங்களில் நிகழ்ச்சி நடத்தினர்.
அதில், 'அதிவேக பயணத்தை தவிர்க்க வேண்டும்; சாலை விதிகளை மதிக்க வேண்டும்; டூவீலர் ஓட்டிகள் கட்டாயம் ெஹல்மெட் அணிய வேண்டும், மது அருந்திய படி வாகனங்களை ஓட்டக்கூடாது' என்பது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், துணை கமிஷனர் கிரீஷ் யாதவ், கேக் வெட்டி மக்களுக்கு வழங்கினார். உதவி ஆணையர் அனில்குமார், கிட்ஸ் கிளப் பள்ளி குழும சேர்மன் மோகன் கார்த்திக் மற்றும் திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பினர் பங்கேற்றனர்.

