/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்களுக்கு எதிரான குற்றம் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
மாணவர்களுக்கு எதிரான குற்றம் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாணவர்களுக்கு எதிரான குற்றம் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாணவர்களுக்கு எதிரான குற்றம் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : செப் 24, 2025 11:23 PM

உடுமலை: உடுமலை எஸ்.கே.பி மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி உதவி தலைமையாசிரியர் குமரேசன் வரவேற்றார். தலைமையாசிரியர் சுப்ரமணியம் முன்னிலை வகித்து, மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் பேசினார்.
உடுமலை மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உதவி ஆய்வாளர் சித்ரா, தற்போதுள்ள சூழலில் மாணவர்களுக்கு ஏற்படும் சமூக குற்றங்கள் குறித்தும், அதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், போக்சோ நடவடிக்கைகள், போதைபொருட்கள் விற்பனைக்கு தடை உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு விளக்கினார். பள்ளி உதவி தலைமையாசிரியர் சேஷநாராயணன் நன்றி தெரிவித்தார்.