/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 18, 2025 12:13 AM

திருப்பூர்; காங்கயம் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் கல்லுாரியில், மாணவர்களுக்கான ஐ.சி.எஸ்.ஐ., விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் சுரேஷ், வரவேற்றார். பி.காம்., சி.எஸ்., துறை தலைவர் குருநாதன், பேசினார். ஐ.சி.எஸ்.ஐ.,யின் எஸ்.ஐ.ஆர்.சி., பிரிவு கோவை துணைத் தலைவர் யுவராஜ், நிறுவன செயலாளர் சகுந்தலா, விஜய் மகேந்திரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.காங்கயம் கல்விக்குழும தலைமை நிர்வாக அதிகாரி மகேந்திரா கவுடா, முன்னிலையில், கல்லுாரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. காங்கயம் கல்விக்குழும நிர்வாகிகள் ராமலிங்கம், செயலாளர் வெங்கடாச்சலம், தாளாளர் ஆனந்த வடிவேல், பொருளாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் பேசினர். ஆங்கிலத்துறை தலைவர் கவிதா, நன்றி கூறினார்.