நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை அரசு கலைக்கல்லுாரி நாட்டுநலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை சார்பில் போதை பொருள்விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார். மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர்.
தொடர்ந்து மாணவர்கள் கல்லுாரியில் துவங்கி எலையமுத்துார் பிரிவு, யூனியன் ஆபீஸ், ருத்தரப்ப நகர், ராமசாமி நகர் வழியாக மீண்டும் கல்லுாரியில் பேரணியை நிறைவு செய்தனர்.
ஏற்பாடுகளை, கல்லுாரி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் ரேவதி, குமரவடிவேல், தேசிய மாணவர் படை அலுவலர் விஜயகுமார், சுற்றுலாத்துறை தலைவர் விஜய்ஆனந்த் மற்றும் உடற்கல்வி இயக்குனர் மனோகர் செந்துார் பாண்டி செய்திருந்தனர்.