/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வங்கி அடகு நகை மோசடி விவகாரம்; கேரள போலீசார் திருப்பூரில் விசாரணை
/
வங்கி அடகு நகை மோசடி விவகாரம்; கேரள போலீசார் திருப்பூரில் விசாரணை
வங்கி அடகு நகை மோசடி விவகாரம்; கேரள போலீசார் திருப்பூரில் விசாரணை
வங்கி அடகு நகை மோசடி விவகாரம்; கேரள போலீசார் திருப்பூரில் விசாரணை
ADDED : பிப் 08, 2025 06:51 AM

திருப்பூர்; வங்கி அடகு நகை மோசடி விவகாரம் தொடர்பாக திருப்பூரில் உள்ள வங்கியில், கைதானவர்களை அழைத்து வந்து கேரள போலீசார் விசாரணை நடத்தினர்.
திருச்சியைச் சேர்ந்த மாதா ஜெயக்குமார், 34, திருப்பூரில் தனியார் வங்கியில் சில ஆண்டுகள் முன் பணிபுரிந்தார். அவருடன் சந்திராபுரத்தைச் சேர்ந்த கார்த்திக், 29 என்பவரும் வேலைபார்த்தார். பின்னர், மாதா ஜெயக்குமார் கேரள மாநிலத்தில் பாங்க் ஆப் மகாராஷ்டிராவிலும், கார்த்திக் திருப்பூரில் டி.பி.எஸ்., வங்கியில் வேலைக்குச் சேர்ந்தனர்.
மாதா ஜெயக்குமார் வேலை செய்த வடகரை வங்கி கிளையில், தணிக்கையின் போது, வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளுக்குப் பதிலாக போலி நகைகள் இருப்பது தெரிய வந்தது.வடகரை குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், மாதா ஜெயக்குமார் இதில் ஈடுபட்டது தெரிந்தது. அவரிடம் விசாரித்த போது, திருப்பூரில் கார்த்திக் பணியாற்றும் டி.பி.எஸ்., வங்கி மற்றும் வேறு சில வங்கிகளில் இந்த நகைகள் அடகு வைக்கப்பட்டது தெரிந்தது. கடந்தாண்டு ஆக., மாதம் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். பின் உரிய ஆவணங்களுடன் இந்த வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டு விசாரணை நடந்தது. வழக்கு தொடர்பாக மேல் விசாரணை கடந்த இரு நாட்களாக திருப்பூரில் நடந்தது. இதுதொடர்பாக கைதான மாதா ஜெயக்குமார், கார்த்திக் ஆகியோரை அழைத்துக் கொண்டு திருப்பூர் வந்த கேரள மாநில போலீசார், கார்த்திக் பணியாற்றிய, வங்கியில் பல்வேறு ஆவணங்களை ஒப்பிட்டு, மோசடி செய்யப்பட்ட நகைகள் குறித்த விவரங் களுடன் ஆய்வு நடத்தினர்.
விசாரணை விவரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.