sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

போனஸ் பட்டுவாடா துவங்கியது பனியன் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

/

போனஸ் பட்டுவாடா துவங்கியது பனியன் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

போனஸ் பட்டுவாடா துவங்கியது பனியன் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

போனஸ் பட்டுவாடா துவங்கியது பனியன் தொழிலாளர்கள் மகிழ்ச்சி


ADDED : அக் 06, 2025 04:45 AM

Google News

ADDED : அக் 06, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பனியன் தொழிலாளருக்கு போனஸ் பட்டுவாடா துவங்கிவிட்-டது. தீபாவளி பண்டிகைக்கு ஆடை, வீட்டு உபயோக பொருள் வாங்க வந்தவர்களால் கடை வீதிகள் நேற்று மக்கள் கூட்டத்தால் அலைமோதியது.

தீபாவளி பண்டிகை, 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. தொழி-லாளருக்கு, சனிக்கிழமை சம்பளத்துடன் சேர்த்து போனஸ் வழங்-குவது திருப்பூரில் வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் சம்-பளம் வழங்கும் போது, 20 சதவீத நிறுவனங்கள் போனஸ் வழங்-கியுள்ளன.

அதாவது, அமெரிக்க ஆர்டர் இழப்பால் பாதித்த நிறுவனங்கள், முன்கூட்டியே போனஸ் கொடுத்து, தொழிலாளர்களுக்கு, 10 முதல் 15 நாட்கள் வரை, தீபாவளி பண்டிகை விடுமுறை அளிக்க திட்டமிட்டுள்ளன. வரும், 11ம் தேதி சம்பளத்துடன், 70 சதவீத தொழிலாளருக்கு போனஸ் வழங்கி முடிக்கப்படும்; மீதியுள்ள தொழிலாளருக்கு 15ம் தேதிக்கு பிறகு வழங்க, சில நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

அவசரமாக முடிக்க வேண்டிய ஆர்டர்கள் இருப்பதால், தொழி-லாளரை தக்க வைக்க வேண்டி, 15ம் தேதிக்கு பிறகு, பனியன் நிறுவன அலுவலர், பணியாளர் மற்றும் தொழிலாளருக்கு போனஸ் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். இருப்பினும், போனஸ் பட்டுவாடா துவங்கிவிட்டதால், அதனை கொண்டு தீபாவளி 'பட்-ஜெட்'டை நிறைவேற்ற தொழிலாளர் குடும்பங்கள் தயாராகிவிட்-டன. இதனிடையே ஜவுளி எடுக்க வந்த மக்கள், காதர்பேட்டை பகுதிகளில் உள்ள பனியன் பஜாரில், பின்னலாடைகள், இரவு நேர ஆடைகள், உள்ளாடைகள் வாங்கவும் குவிந்தனர். இதனால், நஞ்சப்பா ரோடு பகுதியிலும் கூட்டம் அலைமோதியது.






      Dinamalar
      Follow us