/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., நீர் திருட்டு ; ஒருவர் மீது வழக்கு பதிவு: அதிகாரிகள் எச்சரிக்கை
/
பி.ஏ.பி., நீர் திருட்டு ; ஒருவர் மீது வழக்கு பதிவு: அதிகாரிகள் எச்சரிக்கை
பி.ஏ.பி., நீர் திருட்டு ; ஒருவர் மீது வழக்கு பதிவு: அதிகாரிகள் எச்சரிக்கை
பி.ஏ.பி., நீர் திருட்டு ; ஒருவர் மீது வழக்கு பதிவு: அதிகாரிகள் எச்சரிக்கை
ADDED : செப் 26, 2024 11:33 PM

உடுமலை : உடுமலை அருகே, பி.ஏ.பி., பாசன நீரை சட்ட விரோதமாக திருடியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்குட்பட்ட, 94 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.
பி.ஏ.பி., பாசன நீரை திருடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், நீர் வளத்துறை, வருவாய்த்துறை, மின் வாரியம், போலீசாரை கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதுப்பாளையம், கிளைக்கால்வாய் பிரிவில், அடிவள்ளி மேற்கு வாய்க்காலில் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் கொண்டு செல்லும் நிலையில், அதே கால்வாயில், 4ம் மண்டல பாசனத்திற்குரிய மடையை உடைத்து, சிந்திலுப்பு கிராமத்தைச்சேர்ந்த கணபதி, அவரது கிணற்றுக்கு நீர் எடுத்துக்கொண்டிருந்தது தெரிந்தது.
இதனையடுத்து, பாசன நீரை முறைகேடாக திருடியதோடு, பாசனக்கால்வாயை சேதப்படுத்திய நபர் மீது, நீர் வளத்துறை, நெகமம், பெதப்பம்பட்டி பிரிவு இளம் பொறியாளர் விஜயசேகர் கொடுத்த புகாரின் பேரில், குடிமங்கலம் போலீசார், கணபதி மீது வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.
பி.ஏ.பி., பாசன நீர் திருட்டை தடுக்க, அரசுத்துறை அதிகாரிகளைக்கொண்ட குழு அமைக்கப்பட்டு, பிரதான கால்வாய், கிளைக்கால்வாய் மற்றும் பகிர்மான கால்வாய்களில் தொடர் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது, போலீசில் வழக்குப்பதிவு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.