/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறந்த போலீஸ் ஸ்டேஷன்; திருப்பூர் வடக்கு 2ம் இடம்
/
சிறந்த போலீஸ் ஸ்டேஷன்; திருப்பூர் வடக்கு 2ம் இடம்
ADDED : ஜன 26, 2025 11:59 PM

திருப்பூர்; தமிழகத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக, இரண்டாவது இடத்துக்கு திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டது.
தமிழகத்தில் மாநகரம், மாவட்டத்தில் உள்ள ஸ்டேஷன்கள் வாரியாக ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு, வழக்குகளின் நிலை, கோப்புகள் பராமரிப்பு, குற்ற தடுப்பு, நடவடிக்கை என, பல்வேறு விஷயங்களை கணக்கில் கொண்டு, சிறந்து விளங்கும் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டு குடியரசு தினத்தன்று விருது வழங்கப்படுவது வழக்கம்.
கடந்த 2023ம் ஆண்டுக்கான சிறந்த போலீஸ் ஸ்டேஷன்கள் தேர்வு செய்யும் பட்டியலில், திருப்பூர் மாநகரில் உள்ள திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் இரண்டாவது இடத்தை பிடித்தது.
இதற்கான விருதை இன்ஸ்பெக்டர் உதயகுமார் சென்னையில்நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் ஸ்டாலினிடம் பெற்று கொண்டார்.
இன்ஸ்பெக்டர் உதய குமார் கூறுகையில், 'மேலும் திறம்படவும், உத்வேகத்துடனும் நாங்கள் பணிபுரிய இது துணை புரியும்'' என்றார்.
கடந்த 2020ம் ஆண்டில் திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் முதலிடம், 2022ல், திருப்பூர் வடக்கு முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

