/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாரதி இன்டர்நேஷனல் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் அசத்தல்
/
பாரதி இன்டர்நேஷனல் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் அசத்தல்
பாரதி இன்டர்நேஷனல் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் அசத்தல்
பாரதி இன்டர்நேஷனல் பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் அசத்தல்
ADDED : மே 14, 2025 11:54 PM

திருப்பூர்,; விஜயமங்கலம், பாரதி இன்டர்நேஷனல் பள்ளியில் இருந்து சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு எழுதிய, 97 மாணவர்களும், சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய, 61 மாணவர்களும், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவி சம்ரிதிகா பிளஸ் 2 வில், 500 க்கு, 490 மதிப்பெண் பெற்று, பெருந்துறை, தாலுகா மற்றும் பள்ளி அளவில் முதலிடம், மாணவர் கமல்பிரகாஷ், 500க்கு, 475 மதிப்பெண் பெற்று, 2 வது இடம், மாணவர் கிேஷார், 460 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடம், மாணவர் யஷ்வந்த், 459, மாணவி பரணிஸ்ரீ, 457 மதிப்பெண் பெற்று நான்கு மற்றும் ஐந்தாமிடம் பெற்றனர்.
பத்தாம் வகுப்பில் மாணவி மோகிதவர்ஷா, 500 க்கு, 475 பெற்று முதலிடம், மாணவி மெய்த்திரா, 500 க்கு, 472 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி மோகனப்பிரியா, 500 க்கு, 468 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடம். வெற்றி பெற்ற மாணவர் களையும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.