/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாரதியார் பல்கலை கல்லுாரி கபடி போட்டி: அரையிறுதியில் அரசு கல்லுாரி அணிகள்
/
பாரதியார் பல்கலை கல்லுாரி கபடி போட்டி: அரையிறுதியில் அரசு கல்லுாரி அணிகள்
பாரதியார் பல்கலை கல்லுாரி கபடி போட்டி: அரையிறுதியில் அரசு கல்லுாரி அணிகள்
பாரதியார் பல்கலை கல்லுாரி கபடி போட்டி: அரையிறுதியில் அரசு கல்லுாரி அணிகள்
ADDED : செப் 25, 2024 12:23 AM

திருப்பூர் : கல்லுாரிகளுக்கு இடையிலான கபடி போட்டி, நிப்ட்-டீ கல்லுாரியில் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் வெற்றிபெற்று, நான்கு அணிகள், அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.
பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான கபடி போட்டி, நான்கு பிரிவுகளாக நடைபெறுகிறது. கோவை, திருப்பூர் மாவட்ட கல்லுாரிகளுக்கு இடையிலான 'பி' பிரிவு போட்டி, முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி மைதானத்தில் நேற்று துவங்கியது. கல்லுாரி முதல்வர் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு கபாடி கழக பொருளாளர் சண்முகம் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த 22 கல்லுாரி கபடி அணிகள் பங்கேற்று மோதிவருகின்றன. முதல்நாளான நேற்று முதல் மூன்று சுற்று போட்டிகள் நடைபெற்றன. மூன்று சுற்று போட்டிகளில் வெற்றிபெற்று, கோவை எஸ்.ஆர்.எஸ்., கல்லுாரி, கே.பி.ஆர்., கல்லுாரி, அவிநாசி அரசு கலை கல்லுாரி, கோவை அரசு கலை கல்லுாரி அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன.
அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்று போட்டிகள் நிப்ட்-டீ மைதானத்தில் இன்று காலை முதல் நடைபெறுகிறது. நான்கு பிரிவுகளில் நடைபெறும் போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, பல்கலை கழக கபடி அணி உருவாக்கப்படும். 12 வீரர்களை உள்ளடக்கிய பாரதியார் பல்கலை அணி, தென்னிந்திய அளவில் பல்கலை கழகங்களுக்கு இடையில் நடைபெறும் கபடி போட்டியில் பங்கேற்கும்.