/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.60 லட்சத்தில் வகுப்பறை : அரசு பள்ளியில் பூமி பூஜை
/
ரூ.60 லட்சத்தில் வகுப்பறை : அரசு பள்ளியில் பூமி பூஜை
ரூ.60 லட்சத்தில் வகுப்பறை : அரசு பள்ளியில் பூமி பூஜை
ரூ.60 லட்சத்தில் வகுப்பறை : அரசு பள்ளியில் பூமி பூஜை
ADDED : அக் 30, 2025 12:36 AM
திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கூலிபாளையத்தில் உள்ள வடக்கு அரசு நடுநிலைப்பள்ளியில், 60 லட்சம் ரூபாய் மதிப்பில், நான்கு வகுப்பறை கட்டுவதற்கும் பூமி பூஜை நடந்தது.
டாக்டர் பொம்முசாமி தலைமை வகித்தார். அருள்செல்வம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வீரபாண்டி கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் மாநில தலைவர் இந்திராணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனிசாமி, நிர்வாகி ராஜன் வரவேற்றனர். திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அலுவலர் சியாமளா வாழ்த்துரை வழங்கினர்.
திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி சார்பில், இரண்டு தளத்தில் கான்கிரீட் அமைக்கும் செலவும் மற்றும் ஊர் பொதுமக்கள், டாக்டர்கள் உள்ளிட்ட பங்களிப்பில், இந்த வகுப்பறை கட்டப்பட உள்ளது. தலைமையாசிரியை மஞ்சுளா நன்றி கூறினார்.