/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி பள்ளியில் ஆங்கில கண்காட்சி
/
மாநகராட்சி பள்ளியில் ஆங்கில கண்காட்சி
ADDED : அக் 30, 2025 12:37 AM
திருப்பூர்: திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில கண்காட்சி மாணவர் திறமைகளின் வெளிப்பாடாக சிறப்பாக அமைந்தது. மொழியின் மகத்துவத்தையும், கற்றலின் மகிழ்ச்சியையும் இணைத்து மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை பிரதிபலித்தனர். இக்கண் காட்சியை, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு காளிமுத்து நேரில் பார்வையிட்டார். மாணவர்களின் புதுமை சிந்தனையும், ஆங்கிலத்தில் தாராளமாக பேசும் திறனையும் பாராட்டினார்.
ஆங்கில ஆசிரியை கல்பனா இக்கண்காட்சியை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினார். மாணவர்கள் ஆங்கில இலக்கணம், கவிதை விளக்கம், எளிய உரையாடல் திறன் போன்ற பல்வேறு தலைப்புகளில் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தினர். பள்ளி தலைமையாசிரியர் கருப்பையா, உதவி தலைமை ஆசிரியர் உட்பட பலர் பங்கேற்றனர்.

