/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நம்ம ஊரு நம்ம பள்ளி' வகுப்பறை கட்ட பூமி பூஜை
/
'நம்ம ஊரு நம்ம பள்ளி' வகுப்பறை கட்ட பூமி பூஜை
ADDED : அக் 26, 2024 10:57 PM

திருப்பூர்: பல்லடம் அருகே கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 'ரவுண்ட் டேபிள் எண்: 116', 'லேடிஸ் சர்க்கிள் - 44' ஆகியன சார்பில், 1.40 கோடி ரூபாயில், பத்து வகுப்பறைகள் கட்டப்பட திட்டமிடப்பட்டது. இதற்கான பூமி பூஜை விழா நடந்தது. கடந்த கல்வியாண்டில், நான்கு வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு, ஒப்படைக்கப்பட்ட நிலையில், கூடுதலாக ஆறு வகுப்பறைகள் கட்டுவற்கான விரிவாக்க பணிக்கு பூமி பூஜை பள்ளி வளாகத்தில் நடந்தது.
கணபதிபாளையம் ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி, பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர். ரவுண்ட் டேபிள் அமைப்பு தேசிய செயலாளர் விஷ்ணுபிரபாகர் முன்னிலை வகித்தார். ஊராட்சி துணைத்தலைவர் முத்துக்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் மரகதம், துணை தலைமை ஆசிரியர் மாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.