UPDATED : அக் 28, 2026 07:48 PM
ADDED : அக் 28, 2026 07:46 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: ஞாயிறு தோறும் போத்தனுாரில் இருந்து பீஹார் மாநிலம் பரூனிக்கு இயக்கப்படும் வாராந்திர ரயிலின் இயக்கம் நவ. 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு மாலை 6:15 மணிக்கு போத்தனுாரில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06021) செவ்வாய் மதியம் 1:30 மணிக்கு பரூனி சென்றடைகிறது. மறுமார்க்கமாக புதன் இரவு 10:30 மணிக்கு பரூனியில் புறப்பட்டு வெள்ளி மாலை 6:30 மணிக்கு போத்தனுார் வந்தடைகிறது.
போத்தனூரில் இருந்து புறப்படும் ரயில் நவ. 29 வரையும், பரூனியில் இருந்து புறப்படும் ரயில் டிச. 2 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
