/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மேற்கு ரோட்டரி சார்பில் ரத்த தான முகாம்
/
மேற்கு ரோட்டரி சார்பில் ரத்த தான முகாம்
ADDED : ஜூலை 08, 2025 12:31 AM

திருப்பூர்; கோயமுத்துார் கிரீன்சிட்டி ரோட்டரி, திருப்பூர் மேற்கு ரோட்டரி, ரோட்டரி, ஐ.எம்.ஏ., ரத்த வங்கி, யூனிசோர்ஸ் டிரண்ட் இந்தியா, திருப்பூர் மேற்கு ரோட்டரி மக்கள் மருத்துவமனை சார்பில், கண் மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடந்தது.
கணியாம்பூண்டி, யூனிசோர்ஸ் டிரண்ட் இந்தியா நிறுவனத்தில் நடந்த முகாம்கள், மாவட்ட கவர்னர் செல்ல ராகவேந்திரன், உதவி கமிஷனர் ராஜா மகேந்திரன் வழிகாட்டுதலுடன் நடந்தன.
முகாமில், 60 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது; ஐ.எம்.ஏ., ரத்த வங்கிக்கு வழங்கப்பட்டது. திருப்பூர் மேற்கு ரோட்டரி தலைவர் ஆறுமுகன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் செந்தில்பிரபு, உதவி கவர்னர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர், முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.