தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வாரிய உறுப்பினர் அங்கீகாரம் ‘நிப்ட் –டீ’ கல்லுாரி கோரிக்கை

வாரிய உறுப்பினர் அங்கீகாரம் ‘நிப்ட் –டீ’ கல்லுாரி கோரிக்கை

வாரிய உறுப்பினர் அங்கீகாரம் ‘நிப்ட் –டீ’ கல்லுாரி கோரிக்கை


UPDATED : அக் 16, 2026 12:29 AM

ADDED : அக் 16, 2026 12:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 12:29 AM ADDED : அக் 16, 2026 12:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடைத் தொழில் மேம்பாட்டுக்காக, ஏற்றுமதியாளர்கள் இணைந்து அரசு வழிகாட்டுதலுடன் ‘நிப்ட்–டீ’ கல்லுாரியைத் தொடங்கினர். கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லுாரி, தன்னாட்சி அங்கீகாரத்துடன் ஆடை வடிவமைப்பு சார்ந்த படிப்புகளை வழங்கி வருகிறது.

தமிழ்நாடு பின்னலாடை வாரியம் அமைப்பதற்கான முயற்சியில், திருப்பூர் தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லுாரி, தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் ஆகியவற்றையும் உறுப்பினர்களாகச் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘நிப்ட்–டீ’ கல்லுாரியின் முதன்மை ஆலோசகர் ராஜா சண்முகம் கூறுகையில், ‘‘கல்லுாரியில் மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் வடிவமைப்பு மையம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. மத்திய ஜவுளித்துறை சார்பில் ‘நிப்ட்–டீ அடல் இன்குபேஷன்’ மையமும் செயல்படுகிறது. பின்னலாடைத் தொழிலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பங்களித்து வரும் எங்கள் கல்லுாரியையும் வாரியத்தில் உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் என தமிழக ஜவுளித்துறை ஆணையருக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us