/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜெய் சாரதா பள்ளியில் புத்தக கண்காட்சி
/
ஜெய் சாரதா பள்ளியில் புத்தக கண்காட்சி
ADDED : ஜூலை 10, 2025 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், 15 வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில், பல்வேறு பதிப்பகங்கள் பங்கேற்கும், புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.
புத்தக கண்காட்சியை, பள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுசாமி, துவக்கி வைத்து, பார்வையிட்டார். அறக்கட்டளை செயலாளர் கீர்த்திகாவாணி சதீஷ், முதல்வர் மணிமலர் உடனிருந்தனர். இதில், நியூ செஞ்சுரி, சோழா, அமிர்தலிங்கம் புத்தக நிறுவனங்கள் உட்பட பல்வேறு பதிப்பகத்தினர், புத்தகங்களை காட்சிப்படுத்தினர். மாணவர்கள், ஆசிரியர்கள் புத்தக கண்காட்சியில் பங்கேற்று, புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இன்றும், கண்காட்சி நடக்கிறது.