தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி


UPDATED : நவ 01, 2026 09:11 PM

ADDED : நவ 01, 2026 09:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2026 09:11 PM ADDED : நவ 01, 2026 09:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: அக்டோபர் மாதம், உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.

அதனையொட்டி, திருப்பூர் மக்கள் அமைப்பு சார்பில், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, மத்திய பஸ்ஸ்டாண்டில் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு போலீஸ் துணை கமிஷனர் ராஜாசுந்தர் தலைமை வகித்தார். மார்பகப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவதன் அவசியம்; ஆரம்ப நிலையிலேயே மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதன் முக்கியத்துவம்; உரிய காலத்தில் சிகிச்சை பெறுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

திருப்பூர் மக்கள் அமைப்பின் விழிப்புணர்வு குழு முதன்மை ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், நித்தியானந்தன், தேவிப்பிரியா உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us