/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய சிலம்பாட்டத்தில் பிரைட் பப்ளிக் பள்ளி சாதனை
/
குறுமைய சிலம்பாட்டத்தில் பிரைட் பப்ளிக் பள்ளி சாதனை
குறுமைய சிலம்பாட்டத்தில் பிரைட் பப்ளிக் பள்ளி சாதனை
குறுமைய சிலம்பாட்டத்தில் பிரைட் பப்ளிக் பள்ளி சாதனை
ADDED : ஆக 06, 2025 12:23 AM

திருப்பூர்; திருப்பூர் விஜயாபுரம் பிரிவில் உள்ள பிரைட் பப்ளிக் பள்ளி மாணவியர் குறுமைய அளவிலான சிலம்பாட்டத்தில் சாதனை படைத்துள்ளனர்.
திருப்பூர் தெற்கு குறுமைய விளையாட்டு போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நிப்ட்-டீ கல்லுாரி வளாகத்தில் சிலம்ப போட்டி நடைபெற்றது. பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
திருப்பூர் பிரைட் பப்ளிக் பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர். இதில், 14வயதுக்கு உட்பட்ட 40 கிலோ எடை பிரிவில், ரித்திகா; 35 கிலோ எடைப்பிரிவில் தருண்யா ஸ்ரீ, 17 வயது 40 கிலோ எடைப் பிரிவில் மாணவி குறிஞ்சி ஆகியோர் இரண்டாமிடம் பெற்றனர்.
மூன்று பேரும் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற மாணவியரை, அன்பு அறக்கட்டளை தலைவர் மோகன், பொருளாளர் பாலசுப்ரமணியம் மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.