/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண்ணிடம் வழிப்பறி: அண்ணன் - தம்பி கைது
/
பெண்ணிடம் வழிப்பறி: அண்ணன் - தம்பி கைது
ADDED : நவ 20, 2025 02:54 AM
பல்லடம்: பல்லடம், பனிக்கம்பட்டி ஊராட்சி, பாலசமுத்திரத்தை சேர்ந்த சங்கர் மனைவி நித்யா, 30. ஒரு நிறுவனத்தில் கலெக் ஷன் ஏஜென்டாக உள்ளார்.
நேற்று முன்தினம், கே.என்.புரம் - லட்சுமி மில் பகுதியில், கலெக் ஷன் தொகை, 9 லட்சம் ரூபாயுடன், மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல், அவரிடம் இருந்த, 9 லட்சம் ரூபாய் பணத்தை பறித்து தப்பினர். இது குறித்து நித்யா அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், பல்லடத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன்கள் பிரகாஷ், 36, பிரவீன்குமார், 30, தேனியை சேர்ந்த வைரம் மகன் பாலாஜி, 22 மற்றும் பாண்டியன் மகன் லெனின்குமார், 22, என நான்கு பேர் கைது செய்த போலீசார், தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

