ADDED : டிச 22, 2024 11:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தைச் சேர்ந்தவர் சைபுர் ரகுமான், 38, தனியார் நிறுவன ஊழியர். நேற்று காலை, வீட்டிலிருந்து, 'மாருதி ஜென்' காரில் கோவை புறப்பட்டார். பல்லடம் அருகே, புள்ளியப்பம்பாளையம் வரும்போது, எரிவாயு காலியாகி கார் நின்றது.
சைபுர் ரகுமான், பெட்ரோலுக்கு மாற்றி, காரை இயக்க முயன்றபோது, கார் தீப்பிடித்தது.
தீயணைப்பு படையினர் வருவதற்குள், காரில் பரவிய தீ, கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இதில் கார் முழுமையாக கருகி நாசமானது.
பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.