நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை,; உடுமலை தாலுாக, பொள்ளாச்சி தாலுகா எல்லையில் தேவனுார்புதுார் அமைந்துள்ளது. இரண்டு நகரங்களிலிருந்தும் பஸ்கள் இங்கு இயக்கப்படுகின்றன. இங்கு பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, உடுமலை ஒன்றிய நிர்வாகமும், தேவனுார்புதுார் ஊராட்சியும் அங்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.