/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மத்திய பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் 'வெளியே'! இடம் இல்லாததால் சிக்கல்
/
மத்திய பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் 'வெளியே'! இடம் இல்லாததால் சிக்கல்
மத்திய பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் 'வெளியே'! இடம் இல்லாததால் சிக்கல்
மத்திய பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் 'வெளியே'! இடம் இல்லாததால் சிக்கல்
ADDED : ஜூலை 07, 2025 12:44 AM

திருப்பூர்: திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் பஸ்களை நிறுத்த போதிய இடமில்லாததால், டவுன், சர்வீஸ் பஸ்கள் சிலவற்றை பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே நிறுத்தி, அங்கிருந்து இயக்க டிரைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டது. இருப்பினும், பஸ் ஸ்டாண்டுக்குள், பஸ்களை நிறுத்து வதற்கு போதுமான இடம் இல்லாத சூழல் நிலவுகிறது.
நெருக்கடியாக உள்ளதால், பஸ் ஸ்டாண்ட்டுக்கு வெளியே இருந்து, 47, 16, 15 உள்ளிட்ட காங்கயம், கொடுவாய், நாச்சிபாளையம், பல்லடம் செல்லும் டவுன் பஸ்களை இயக்க டிரைவர்களுக்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பீக்ஹவர் தருணங்களில் பஸ்களை வெளியே நிறுத்தி, அங்கிருந்தே பயணிகளை ஏற்றி, இறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற டவுன், சர்வீஸ் பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் இருந்து இயக்கப்படுகின்றன.
மாற்றம் ஏன்?
விரிவுபடுத்தப்பட்ட பஸ் ஸ்டாண்டில், ஒரே நேரத்தில், 35 பஸ்கள் ரேக்கிங் நிற்கும் அளவுக்கு தான் இடவசதி உள்ளது. ஆனால், எப்போதும், 30 - 40 பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் நிற்கின்றன. இவை தவிர, பத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் கடந்து செல்வதும், வருவதும், போவதுமாக உள்ளது. இதனால், இடநெருக்கடி அதிகமாகிறது.
புதுமார்க்கெட் வீதியில் பஸ் இயக்கத்துக்கு தடைவிதித்துள்ளதால், மேற்கு புற ரேக்கில் நிற்கசெல்லும் பஸ்கள் எளிதில் புறப்பட வசதியாக, திரும்பி நிற்காமல், அப்படியே நிறுத்தப்படுகின்றன; இதனாலும், இட நெருக்கடி ஏற்படுகிறது.
மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை பஸ் ஸ்டாண்டுக்குள்போக்குவரத்து நெரிசல் அதிகம் என்பதால், குறிப்பிட்ட சில பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு பலகை வைக்கப்படாததால், காங்கயம், ஊத்துக்குளி பஸ்களை பயணிகள் தேடுகின்றனர்.
பஸ் ஸ்டாண்டுக்குள் மினி பஸ்கள் நிற்க இடம் ஒதுக்கப்படுகிறது.
கட்டணமில்லாத பஸ் பயணத்தை மகளிருக்கு தரும், அரசின் டவுன் பஸ்களை நிறுத்துவதற்கோ இடமில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். எந்த ஊரிலும் இல்லாத நடைமுறையாக, மினி பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் அனுமதிப்பது திருப்பூரில் தான்; இவ்விஷயத்தில்புதிய கலெக்டர் தலையிட்டு, பஸ் ஸ்டாண்டில் ஆய்வு நடத்தி, பஸ் நிற்குமிடம், இடைஞ்சல் குறித்து ஆய்வு நடத்தி, தக்க தீர்வு சொல்ல வேண்டும். இடையூறு என்றால், மினி பஸ்களையும் பஸ் ஸ்டாண்டுக்கு வெளியில் இருந்து இயக்க வேண்டும்.
- அரசு பஸ் டிரைவர்கள்