/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வழி இல்லாததால் 'வலி' எதிரெதிரே பஸ்கள்; விபத்துக்கு அடிகோலும்
/
வழி இல்லாததால் 'வலி' எதிரெதிரே பஸ்கள்; விபத்துக்கு அடிகோலும்
வழி இல்லாததால் 'வலி' எதிரெதிரே பஸ்கள்; விபத்துக்கு அடிகோலும்
வழி இல்லாததால் 'வலி' எதிரெதிரே பஸ்கள்; விபத்துக்கு அடிகோலும்
ADDED : மே 06, 2025 06:29 AM

திருப்பூர்; கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் உள்ளே - வெளியே செல்ல ஒரே நுழைவாயிலை பஸ்கள் பயன்படுத்த வேண்டியுள்ளதால், விபத்து அபாயம் நீடிக்கிறது.
திருப்பூரில், கோவில்வழியில் அமைந்துள்ள பஸ் ஸ்டாண்டில் கட்டுமானப்பணிகள் நடக்கின்றன. தென்மாவட்டங்களில் இருந்து அதிகளவு திருப்பூருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்களை நிறுத்தி, இயக்க ஏதுவாகவும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் லட்சம் பயணிகளை கையாள வசதியாகவும், 'ஸ்மார்ட்சிட்டி' திட்டத்தின் கீழ் பஸ் ஸ்டாண்ட் விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், வடக்கு நுழைவாயில் அடைக்கப்பட்டு, தெற்கு நுழைவாயிலில் வழியாக பஸ்கள் சென்று திரும்புகின்றன.
உள்ளே - வெளியேசிரமம் தொடர்கிறது
மதுரை, தேனி, கம்பம், திருநெல்வேலி, நாகர்கோவில், துாத்துக்குடி, திருச்செந்துார் உள்ளிட்ட பகுதியில் இருந்து, தினசரி, 50 பஸ்கள் கோவில்வழிக்கு வருகிறது. ஒரே நுழைவாயிலில் பஸ்கள் உள்ளே நுழைந்து, வெளியே வர சிரமம் ஏற்படுகிறது. மத்திய பஸ் ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் தாராபுரம் ரோட்டில் இருந்து ஒரு வழிப்பாதையில் முன்னேறி, தெற்கு நுழைவாயிலுக்கு செல்ல வேண்டியுள்ளது.
தாராபுரம் - திருப்பூர் ரோட்டில், பாதை கருப்பராயன் கோவில் வளைவில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வடக்கு நுழைவு வரை, வேகத்தடை இல்லை. எதிரெதிரே பஸ்கள், பிற கனரக வாகனங்கள் வரும் போது தெளிவாக தெரிவதில்லை. விபத்து நேரிடும் சூழல் உருவாகிறது.