தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கால்வாய் துார்வாரும் பணி நிறைவு

கால்வாய் துார்வாரும் பணி நிறைவு

கால்வாய் துார்வாரும் பணி நிறைவு


UPDATED : நவ 04, 2026 10:41 AM

ADDED : நவ 04, 2026 10:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 10:41 AM ADDED : நவ 04, 2026 10:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: புதுப்பாளையம் கிளைக்கால்வாயில், இரண்டாம் மண்டல பாசனத்துக்கான பகிர்மான கால்வாய்கள் துார்வாரப்பட்டு, தயார் நிலையில் உள்ளதால், நீர்நிர்வாக பிரச்னைகள் குறையும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

பி.ஏ.பி., பாசனத்தில் பிரதான கால்வாயில் இருந்து பிரியும் புதுப்பாளையம் கிளை கால்வாய் வாயிலாக, இரண்டு மற்றும் நான்காம் மண்டலங்களில், 14,530 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

வரும் இரண்டாம் மண்டல பாசனத்துக்கு முன், கால்வாய்களை துார்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். அதன்படி, கிளைக்கால்வாயில் முதற்கட்டமாக கரைகளில் இருந்த சீமைகருவேல மரங்கள் அகற்றப்பட்டன; பின்னர், கால்வாயில் தேங்கியிருந்த மண் மற்றும் இதர கழிவுகள் அகற்றப்பட்டது.

பின்னர், பகிர்மான கால்வாய்கள் துார்வாரும் பணி துவங்கியது. இரண்டு ஆண்டு இடைவெளி காரணமாக, பகிர்மான கால்வாய் முழுவதுமாக புதர் மண்டி காணப்பட்டது.

இதையடுத்து, நீர்வளத்துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

இப்பணிகளை நீர்வளத்துறை திருமூர்த்தி கோட்ட செயற்பொறியாளர் பிரபாகரன், திட்ட குழு உறுப்பினர் நித்தியானந்தம், உதவிப்பொறியாளர் முத்துகுமார், பாசன சபைத்தலைவர்கள் விஜயமோகன், சுரேஷ், நாகராஜன், பொன்னுசாமி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

பாசனத்துக்கு நீர் திறப்புக்கு முன் பகிர்மான கால்வாய்கள் துார்வாரப்பட்டுள்ளதால், நீர் நிர்வாக பிரச்னைகள் குறையும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us