/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'புற்றுநோய்; விழிப்புணர்வு இல்லை'
/
'புற்றுநோய்; விழிப்புணர்வு இல்லை'
ADDED : ஆக 28, 2025 11:16 PM

பல்லடம்,; பல்லடம் ரோட்டரி சங்கம் சார்பில், பெண்களுக்கான மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கூட்டம், பல்லடத்தில் நேற்று நடந்தது. ரோட்டரி சங்கத் தலைவர் மார்ட்டின் தலைமை வகித்தார். செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகளிர் மருத்துவ நிபுணர் பிரபலதா பேசியதாவது:
இந்தியாவில் மிகவும் பொதுவான புற்றுநோயாக மார்பக புற்றுநோய் மாறி உள்ளது. இன்றைய உணவு பழக்கவழக்கங்கள், கலப்பட உணவுகள் உள்ளிட்டவற்றால், அதிகப்படியான பெண்களுக்கு இந்த மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. இந்நோய் இருப்பதே பலருக்கும் தெரிவதில்லை. அமைதியாக இருக்கும் இந்த புற்றுநோய் ஆட்கொல்லி நோயாக மாறுகிறது. ஆரம்ப கட்டத்திலேயே தெரிந்து கொண்டால், இதை எளிதில் குணப்படுத்த முடியும். தாமதமாக கண்டறியப்படுவதால், சிகிச்சைக்காக பல லட்சங்கள் செலவு செய்வதுடன், சிகிச்சையும் பயனற்று போகும் வாய்ப்பு உள்ளது. மார்பு பகுதியில் கட்டி அல்லது புடைத்தல், உருவம் அல்லது உணர்வில் மாற்றம், தோளில் குழி ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகள் மார்பக புற்றுநோய் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. ஆனால், பெண்களுக்கு இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. பெண்கள், இது குறித்து பரிசோதித்துக் கொள்ள வேண்டியது இன்றுள்ள சூழலில் மிகவும் அவசியம். இவ்வாறு பிரபலதா பேசினார்.
மருத்துவர் ஹேமலதா சிறப்புரை ஆற்றினார்.