/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நூற்றாண்டு தேர்த்திருவிழா கொடியேற்றம்: தேவராயன்பாளையத்தில் கோலாகலம்
/
நூற்றாண்டு தேர்த்திருவிழா கொடியேற்றம்: தேவராயன்பாளையத்தில் கோலாகலம்
நூற்றாண்டு தேர்த்திருவிழா கொடியேற்றம்: தேவராயன்பாளையத்தில் கோலாகலம்
நூற்றாண்டு தேர்த்திருவிழா கொடியேற்றம்: தேவராயன்பாளையத்தில் கோலாகலம்
ADDED : பிப் 19, 2024 12:15 AM

அவிநாசி:தேவராயன்பாளையம் ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் 100ம் ஆண்டு மாசி மகத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
அவிநாசி ஒன்றியம், தேவராயன்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் 100ம் ஆண்டு மாசி மகத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. திருப்புக்கொளியூர் ஆதீனம் வாகீசர் மடாலயம் ஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள், 'தி சென்னை சில்க்ஸ்' பரஞ்சோதி ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக காப்பு கட்டுதல், சுவாமி திருவீதி உலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த 19 முதல் 24ம் தேதி வரை அபிஷேக ஆராதனை, திருவிளக்கு பூஜை, ரிஷப வாகன காட்சி, அம்மை அழைத்தல் ஆகியவை நடக்கின்றன.
வரும் 24ம் தேதி கோ பூஜையுடன் காமாட்சியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்து வருதல் ஆகியவை நடக்கின்றன. ஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் தலைமையில் தேர் வடம் பிடித்து திருவீதிகள் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறும். வரும் 25ம் தேதி வண்டி தாரை, பரிவேட்டை, 26ம் தேதி தரிசனம், மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு 24ம் தேதி காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

