ADDED : மே 16, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி, ; மூதாட்டியிடம் செயின் பறித்து தப்பிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
அவிநாசி, சேவூர் அருகே நாட்டுக்கோட்டையன் புதுார் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மனைவி பூரணியம்மாள், 60. கோபி மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
நேற்று மாலை 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து டூவீலரில் வந்து கடையில் பொருட்கள் வாங்குவது போல கடைக்குள் வந்து பூரணியம்மாள் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்கச் செயினை பறித்து கொண்டு டூவீலரில் தப்பியுள்ளார்.
சேவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து செயினை பறித்துச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.