/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காட்சிப்பொருளாக மாறிய சோதனை சாவடி; போலீசார் நியமிக்க வலியுறுத்தல்
/
காட்சிப்பொருளாக மாறிய சோதனை சாவடி; போலீசார் நியமிக்க வலியுறுத்தல்
காட்சிப்பொருளாக மாறிய சோதனை சாவடி; போலீசார் நியமிக்க வலியுறுத்தல்
காட்சிப்பொருளாக மாறிய சோதனை சாவடி; போலீசார் நியமிக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 03, 2025 11:44 PM
உடுமலை; உடுமலை அருகே, மாவட்ட எல்லையில், காட்சிப்பொருளாக மாறியுள்ள, சோதனை சாவடிக்கு, சுழற்சி முறையில், போலீசார் நியமித்து, குற்றத்தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
திருப்பூர் - கோவை மாவட்ட எல்லையில், உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட தேவனுார்புதுார் அமைந்துள்ளது. தளி போலீஸ் கட்டுப்பாட்டிலுள்ள இப்பகுதியை ஒட்டி, பாலாறு, நல்லாறு உட்பட நீராதாரங்கள், மலையடிவாரத்தில் அமைந்துள்ளன.
அப்பகுதியிலிருந்து கனிம வளங்கள் கடத்தலை தடுக்கவும், அதிக எல்லைகளை உள்ளடக்கிய, தளி போலீஸ் ஸ்டேஷனுக்கு, பணிச்சுமையை குறைக்கும் வகையில், தேவனுார்புதுாரில், புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வந்தது.
இதையடுத்து, தற்காலிகமாக தேவனுார்புதுார் அருகே, ஆண்டியூர் பிரிவில், திருப்பூர்- கோவை மாவட்ட எல்லையில், போலீஸ் சோதனைச்சாவடி இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது.
உடுமலை - ஆனைமலை ரோட்டில் வாகனங்களை கண்காணிக்கவும், கனிம வள கடத்தலை தடுக்கவும், இந்த சோதனை சாவடியில், தளி போலீசார் பணியில், ஈடுபடுத்தப்பட்டனர்.
பெருந்தொற்று பரவல் காலத்தில், ஊரடங்கு விதிமீறல் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்த சோதனை சாவடி பயன்பட்டது. கடந்தாண்டு, இந்த சோதனை சாவடிக்கென நிரந்தர கட்டடமும் கட்டி முடிக்கப்பட்டது.
இந்நிலையில், சமீபகாலமாக இந்த சோதனை சாவடியில், போலீசார் பணியில் இருப்பதில்லை. கட்டடமும் காட்சிப்பொருளாக பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதனால்,குற்றத்தடுப்பு பணியில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
எனவே, போலீஸ் சோதனை சாவடி நிரந்தரமாக செயல்படும் வகையில், சுழற்சி முறையில் போலீசார் நியமிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.