/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'லொள்' தொல்லையால் குழந்தைகள் பாதிப்பு
/
'லொள்' தொல்லையால் குழந்தைகள் பாதிப்பு
ADDED : செப் 26, 2025 05:22 AM
உடுமலை; கணக்கம்பாளையம் ஊராட்சியில், தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. அவை, மக்களை விரட்டி தாக்குகின்றன. இதனால், மக்கள் ரோட்டில் நடமாட அச்சமடைந்து வருகின்றனர்.
உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஜெய்கிருஷ்ணா நகரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தெருநாய்கள் பொதுமக்களை அச்சுறுத்துவதும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர்.
அப்பகுதியினர் கூறியதாவது: இந்த குடியிருப்பு பகுதியில், தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இவற்றால் குழந்தைகள் அடிக்கடி பாதிக்கப்பட்டு மருத்துவமனை செல்ல வேண்டியுள்ளது. சமீபத்திலும் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை தெருநாய்கள் துன்புறுத்தியதால் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பெற்றோருக்கு குழந்தைகளை வெளியில் விடுவதற்கும் அச்சமாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் இப்பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, பொதுமக்கள் தெரிவித்தனர்.