/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குழந்தைகள் கையில் போன் வேண்டாமே!'
/
'குழந்தைகள் கையில் போன் வேண்டாமே!'
ADDED : ஜூலை 28, 2025 10:39 PM

திருப்பூர்; திருப்பூர், கூலிபாளையம் நால்ரோடு, வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில், மழலை யர் வகுப்புக்கான பெற்றோர் தின விழா நடந்தது.
பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி தலைமை வகித்து பேசுகையில், ''குழந்தைகளின் கைகளில் மொபைல்போன் கொடுத்து பழக்க வேண்டாம்.
அது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குழந்தைகள், குறும்பு செய்யத்தான் செய்யும்; அதுதான் குழந்தைகளின் இயல்பு.
குழந்தைகள் குறும்பு செய்கின்றனர் என்பதற்காக அவர்களை மொபைல்போனில் மூழ்க செய்யும் பெற்றோரை பல இடங்களில் பார்க்க முடிகிறது. இந்த போக்கு, குழந்தைகளின் உடல் மற்றும் மன நலத்துக்கு நல்லதல்ல,'' என்றார்.
பள்ளி செயலாளர் சிவப்ரியாமாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சசிரேகா, இன்றைய சூழலில் குழந்தை வளர்ப்பில் உள்ள சவால், எதிர்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கினார்.
குழந்தைகளின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில், கூட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பாட்டு, கவிதை, நடனம் உள்ளிட்ட போட்டி களும் நடத்தப்பட்டது.
புதிர்வெட்டு கட்டம், பலுான், பந்து விளை யாட்டு, அட்டைகளை கொண்டு கட்டங்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.