/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் முன்பதிவில் கட்டண கொள்ளை; மாநாட்டில் சி.ஐ.டி.யு., குற்றச்சாட்டு

ADDED : ஆக 14, 2025 08:25 PM
- நமது நிருபர் -
'பஸ் முன்பதிவு கட்டண கொள்ளை நடப்பதை தடுக்க, அரசே பஸ் முன்பதிவு பணியை ஏற்று நடத்த வேண்டும்,' என, சி.ஐ.டி.யு., மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்ட சி.ஐ. டி.யு., மாநாடு, காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம், சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் ராஜேந்திரன் பேசினர்.
ஒருங்கிணைந்த தொழிலாளர்துறை அலுவலகத்தை விரைவில் திறக்க வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு குழு காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தையல் தொழிலை பாதுகாக்க, தொழிலாளர்களுக்கு தையல் இயந்திரம் வழங்க வேண்டும்.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதால், பஸ்களை சரியான வழியில் இயங்கும் வகையில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், தேவையான கருவிகளை பொருத்தி, தரமான உயர்சிகிச்சை வழங்க ஆவன செய்ய வேண்டும்.
பஸ் முன்பதிவு கட்டண கொள்ளை நடப்பதை தடுக்க, அரசே பஸ் முன்பதிவு பணியை ஏற்று நடத்த வேண்டும். கிராமங்களில் நிறுத்தப்பட்ட டவுன் பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது