/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி பயன்படுத்தலாம்
/
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி பயன்படுத்தலாம்
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி பயன்படுத்தலாம்
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி பயன்படுத்தலாம்
ADDED : ஆக 14, 2025 08:25 PM
உடுமலை; உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்னை சாகுபடியில் பரவலாக வெள்ளை ஈ தாக்குதல் காணப்படுகிறது.
தாக்குதலை கட்டுப்படுத்த என்கார்சியா ஒட்டுண்ணி குளவியை ஏக்கருக்கு, 10 இலை துண்டுகள் வீதம் தாக்கப்பட்ட ஓலைகளின் மீது வைத்து கட்டுப்படுத்தலாம். கண்ணாடி இறக்கை பூச்சி இரை விழுங்கிகளை ஏக்கருக்கு, 400 வீதம் தாக்கப்பட்ட மரங்களில் வைக்க வேண்டும்.
விளக்கு பொறியை ஏக்கருக்கு, இரண்டு வீதம் இரவில் 7:00 மணி முதல் 11:00 மணி வரை வைத்து வெள்ளை ஈக்களை கண்காணித்து கவர்ந்து அழிக்கலாம். மஞ்சள் நிற ஒட்டு பொறிகள் ஏக்கருக்கு, 10 வீதம் ஆறடி உயரத்தில் தொங்க விட்டு ஈக்களின் நடமாட்டத்தை கண்காணித்தும், கவர்ந்தும் அழிக்கலாம் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.