/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்துக்கு வழிகாட்டும் நகர சாலை; வாகன ஓட்டிகளுக்கு தீராத தொல்லை
/
விபத்துக்கு வழிகாட்டும் நகர சாலை; வாகன ஓட்டிகளுக்கு தீராத தொல்லை
விபத்துக்கு வழிகாட்டும் நகர சாலை; வாகன ஓட்டிகளுக்கு தீராத தொல்லை
விபத்துக்கு வழிகாட்டும் நகர சாலை; வாகன ஓட்டிகளுக்கு தீராத தொல்லை
ADDED : ஜூலை 16, 2025 11:14 PM

திருப்பூர்; திருப்பூர் நகரின் பிரதான சாலையே குண்டும் குழியுமாக இருப்பது, வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புதிய பஸ் ஸ்டாண்ட், அவிநாசி, சேவூர், பெருமாநல்லுார், ஊத்துக்குளி, கோவை, ஊட்டி உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களுக்கு செல்லும் சாலையாக, ரயில்வே ஸ்டேஷன் சாலை உள்ளது. வாகன போக்குவரத்து மட்டுமின்றி, தினசரி, நுாற்றுக்கணக்கானோர் ரயில் பயணம் மேற்கொள்ள, ரயில்வே ஸ்டேஷன் செல்கின்றனர்.
இதனால், ரயில்வே ஸ்டேஷன் சாலை எந்நேரமும் 'பிஸி'யாக, தொடர்ச்சியாக வாகனங்கள் பயணிக்கும் சாலையாக உள்ள நிலையில், சாலையின் மையப்பகுதியில் குழி ஏற்பட்டு, வாகன ஓட்டிகளை தடுமாற வைக்கிறது.
குழியில் சிக்காமல் வாகனங்களை ஓட்ட, டூவீலர் வாகன ஓட்டிகள் முற்படும் போது, பின்வரும் வாகனங்களில் மோதும் சூழல் ஏற்படுகிறது.
'கலெக்டர் முதற்கொண்டு, மாநகராட்சி அதிகாரிகள், மேயர், போலீஸ் உயரதிகாரிகள் என, பலரும் தினமும் பயணிக்கும் இந்த சாலையின் நிலை, அவர்களது கண்ணில்படாதது வியப்பளிக்கிறது,' என்கின்றனர், வாகன ஓட்டிகள்.
அதேபோல், தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் ஊத்துக்குளி ரோட்டில், முதல் ரயில்வே கேட் பிரிவில் உள்ள சந்திப்பு சாலையில், சாலையின் மையப்பகுதியில் குழாய் உடைந்து கழிவுநீர் வெளியேறிக் கொண்டே இருக்கிறது. இதனால், அந்த இடத்தில் தார் பெயர்ந்து, சாலை மோசமான நிலையில் உள்ளது.
சந்திப்பு பகுதியான இங்கு ஏராளமான வாகனங்கள் குறுக்கும், நெடுக்குமாக பயணிக்கும் நிலையில், விபத்து நேரிடும் வாய்ப்பும் உள்ளது. எனவே, நகர சாலைகளை பராமரிக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

