/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை பணியாளர் பிரச்னை:'மாஜி' எம்.எல்.ஏ., புகார் மனு
/
துாய்மை பணியாளர் பிரச்னை:'மாஜி' எம்.எல்.ஏ., புகார் மனு
துாய்மை பணியாளர் பிரச்னை:'மாஜி' எம்.எல்.ஏ., புகார் மனு
துாய்மை பணியாளர் பிரச்னை:'மாஜி' எம்.எல்.ஏ., புகார் மனு
ADDED : மார் 08, 2024 01:40 AM

திருப்பூர்;மாநகராட்சியில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர் பிரச்னை குறித்து நடவடிக்கை கோரி, அ.தி.மு.க., வினர் மனு அளித்தனர்.
தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் தலைமையில், மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், மாநகராட்சி கமிஷனரிடம் நேற்று அளித்த மனு விவரம்:
மாநகராட்சியில் துாய்மைப் பணியில் தனியார் நிறுவனத்தில் 1,500 ஊழியர்கள், 60 மேற்பார்வையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச சம்பளம் கூட தருவதில்லை. இதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு உரிய பணப் பயன்கள் வழங்கப்டவில்லை.
ஐந்தாண்டுக்கு மேல் பணியாற்றியோருக்கு ஒரு முறை கூட சம்பள உயர்வு வழங்கவில்லை.அதிகாலை பணிக்கு வரும் துாய்மைப் பணியாளர்கள் பல நேரங்களில் இரவு தான் வீடு திரும்புகின்றனர். இவர்களுக்கு சுகாதாரமான குடியிருப்பு, பணியிடத்தில் உரிய வசதிகள் இல்லை.
மேலும் குப்பை தரம் பிரித்து வாங்கப்படுவதில்லை. வீடுகளில் முறையாக குப்பைகள் பெறப்படுவதில்லை, என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தீர்வு காணப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

