/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பருவநிலை மாற்ற மாநாடு; சின்னம் வடிவமைத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு
/
பருவநிலை மாற்ற மாநாடு; சின்னம் வடிவமைத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு
பருவநிலை மாற்ற மாநாடு; சின்னம் வடிவமைத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு
பருவநிலை மாற்ற மாநாடு; சின்னம் வடிவமைத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு
ADDED : ஜன 08, 2025 12:19 AM
திருப்பூர்; பருவநிலை மாற்ற மாநாடு தொடர்பான சின்னம் வடிவமைப்பு போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவருக்கு ஒரு லட்சம் ரூபாய், ஆறுதல்பரிசு பெறும் பத்து பேருக்கு தலா, பத்தாயிரம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.
பருவநிலை மாற்றம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை சார்பில், 'பருவநிலை மாற்றம் 3.0' எனும் தலைப்பில் மாநாடு பிப்., மாதம் நடக்கவுள்ளது.
இம்மாநாடு தொடர்பான விழிப்புணர்வை பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரிடையே ஏற்படுத்தும் நோக்கில், மாணவர்கள், இளைஞர்களுக்கு மாநாடு தொடர்பான சின்னம் வடிவமைப்பு போட்டி நடத்தப்படுகிறது.
' மாணவர்கள் வடிவமைக்கும் சின்னம், சுற்றுச்சூழல் நீடித்த வளர்ச்சி, புதுமை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்திருக்க வேண்டும். சிறந்த சின்னத்துக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்; ஆறுதல் பரிசாக பத்து பேருக்கு, பத்தாயிரம் வழங்கப்படும்,' என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் தங்கள் படைப்புகளை mascotccm@gmail.com என்ற இ மெயில் வாயிலாக வரும், 10 ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் மேலும் விபரங்களுக்கு https://tnclimatechangemission.in என்ற இணையதளத்தில் விபரங்களை அறியலாம். கூடுதல் தகவல்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இயக்குனர் அலுவலகத்தை 044 24336421 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

